தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு ரத்து? அரசின் முடிவு என்ன?

Photo of author

By Rupa

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு ரத்து? அரசின் முடிவு என்ன?

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்பொழுது வரை அதன் தாக்கம் குறையவில்லை. தொற்று பாதிப்பு உச்சகட்ட நிலையில் இருந்த பொழுது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுப்பு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆன்லைன் முறை மூலம் பாடங்கள் கற்பித்தனர். அது மட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் பொது தேர்வு ஏதும் நடைபெறாமல் அனைவரும் முழு தேர்ச்சி பெற்றனர்.

இம்முறை தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் பொது தேர்வுகள் நடைபெற்றது. ஆனால் நான்காவது அலை தற்பொழுது தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. தேனியில் ஒரே பள்ளியை சேர்ந்த 20 வதுற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதனால் அப்பள்ளிக்கு தற்போது விடுப்பு அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி சேலம், சென்னை ,செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீண்டும் அமல்படுத்தியுள்ளனர்.

அவ்வாறு செல்லவில்லை என்றால் ரூ 500 அபராதம் என்றும் தெரிவித்துள்ளனர். பழைய முறை போன்று கட்டுப்பாட்டை தற்பொழுது போட்டாலும் தொற்று பாதிப்பு குறைந்த பாடு இல்லை. நாள் கடத்த கடத்த தொற்று பாதிப்புகள் அதிகரிக்கும் பொழுது பழைய கட்டுப்பாடுகள் அனைத்தும் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மீண்டும் விடுப்ப்பு அளிக்கப்படும். முன்பை போல ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்படும் என்று கூறுகின்றனர்.