கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!

0
96
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள். நிதி கட்டுக்கடகாமல் போகலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உருவாக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணம் சிலருக்கு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சில நேரங்களில் செலவுகள் அதிகரிக்கின்றதே என்ற எண்ணத்துடன் செயல்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்காக மாற்று மருத்துவத்தை கவனிப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.