இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? அப்போ புற்றுநோய் இருக்க வாய்ப்பு இருக்கு… உடனே செக் பண்ணுங்க…

0
147
Cancer symptoms in tamil
#image_title

இன்றைய காலகட்டத்தில் மக்களால் மிகவும் கொடுமையான நோயாக பார்க்கப்படுவது தான் புற்றுநோய். இந்த புற்றுநோய் மக்களை பெருமளவில் பாதிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு வரை இந்த பாதிப்பு சற்று குறைவாக தான் இருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த தொற்று விகிதம் அதிகரித்து விட்டது. அதிலும் கடந்த 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி உலக அளவில் மொத்தம் 14.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் நம்மை புற்றுநோயில் இருந்து காத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

இந்த புற்றுநோயை நாம் ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை செய்தால் எளிமையாக குணப்படுத்திவிட முடியும். அதற்கு நாம் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய வேண்டும். இதனை நாம் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். இது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

புற்றுநோய்க்கான அறிகுறிகள்

  • நமக்கு இயற்கையாகவே சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படும் போது இருமல் ஏற்படும். இது வழக்கமான ஒன்றே ஆனால் வழக்கத்தை விட அதிகமான இருமல் இருந்தால் அதனை நாம் உடனடியாக மருத்துவரை அனுகி சிகிச்சை பெற வேண்டும். ஏனெனில் இது போன்ற அறிகுறிகள் இருந்தால் தொண்டை, நுரையீரல் அல்லது தைராய்டு போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக அளவிலான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 
  • பொதுவாக உடல் எடை என்பது சில நேரங்களில் அதிகரிக்கும் சில நேரங்களில் திடீரென குறையும் இது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், எந்த வித காரணமும் இல்லாமல் 4 முதல் 5 கிலோ வரை எடை குறைந்தால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இதனால் வயிறு, கணையம், உணவுக்குழாய் புற்றுநோயாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
  • மார்பு பகுதிகளில் ஏதாவது கொப்புளம் அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகள் இருப்பின் அது மார்பக புற்றுநோயக இருக்க அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளது. இது ஆண்கள் பெண்கள் என இருவருக்கு வர அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளது. 
  • நம்மில் பலருக்கும் உடல் சூடு காரணமாக சில சமயங்களில் சிறுநீர் நிறம் மாறி வரும் இதனை இதனை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம் ஆனால் அது தொடர்ச்சியாக நடைபெற்றால் அது குடல் அல்லது மலக்குடல் பிரச்சனையாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. 
  • நம் உதடுகளில் சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் தடிப்புகள் தென்பட்டால் அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். 
  • உடல் அதிக சோர்வாக காணப்பட்டால் அது புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். 
  • பெண்களுக்கு வயிற்று பகுதிகளில் திடீரென வீக்கம் ஏற்பட்டாலோ அல்லது அதிகமான இடுப்பு வலி ஏற்பட்டாலே கர்ப்பபை புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளது. மேலும் மாதவிடாய் காலங்களில் இருப்பது போல மற்ற நாட்களிலும் உதிரப்போக்கு இருந்தால் அது கர்ப்பபை வாய் புற்றுநோய் வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம். 

இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை எடுக்க வேண்டும், இவ்வாறு செய்வதன் மூலம் நாம் நம்மை புற்றுநோயில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

author avatar
Gayathri