கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
163
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு இருக்கு குறைவில்லாத நாள். குடும்ப உறவுகளில் எந்தவிதமான குழப்பங்களும் இல்லை. கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல் விலகி குடும்பம் ஒற்றுமையுடன் செயல்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் சுபிட்சகரமாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை வந்த அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஉடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்!
Next articleசிம்மம் – இன்றைய ராசிபலன்!! எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here