அதிமுகவில் இனி இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை – அதிரடி காட்டும் தலைமை! அதிர்ச்சியில் அமைச்சர்கள்
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.ஏறக்குறைய அதிமுகவில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு ஆரம்பித்து முடியும் தருவாயில் உள்ளது.பாஜக மற்றும் தேமுதிக கட்சிகளுடனான பேச்சு வார்த்தை இழுபறியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அதிமுக தலைமை தங்களது கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த வேட்பாளர் தேர்வில் தான் அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்துள்ளது.வழக்கமாக மூத்த நிர்வாகிகள் பெரும்பாலோனோர் தங்களுக்கு அடுத்த அவர்களின் வாரிசை அரசியலில் களமிறக்குவது வழக்கமானது தான்.கடந்த மக்களவை தேர்தலில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்,அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன் மற்றும் மதுரையை சேர்ந்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அவர்களின் மகன் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் களமிறங்கினர்.இதில் ரவீந்தரநாத் மட்டும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் தங்களது வாரிசுகளை களமிறக்க பல மூத்த நிர்வாகிகள் முயற்சி செய்து வருகின்றனர்.அதே போல கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அந்த இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு கேட்டுள்ளனர்.மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப்,துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,திருச்சி வெல்லமண்டி நடராஜன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சர்களின் வாரிசுகளுக்கும் வாய்ப்பு கேட்டு குடைச்சல் தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கோபமடைந்த அதிமுக தலைமை இனி வாரிசுகள் யாருக்கும் சீட் இல்லை என்றும்,அப்படி அவர்களுக்கு சீட் கொடுத்தால் உங்களுக்கு சீட் இல்லை என்றும் சீனியர் நிர்வாகிகளிடம் கறாராக தெரிவித்து விட்டதாம்.எப்படியாவது தங்களுக்கு பிறகு வாரிசை அரசியலில் நுழைத்து விடலாம் என்று காத்திருந்த அனைத்து சீனியர் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.