இப்போதைக்கு ஸ்டேடியங்களில் ரசிகர்களை பார்க்க முடியாது?

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ  கூறுகையில், ‘விளையாட்டு ஸ்டேடியங்களில் ரசிகர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது. அடுத்த ஓரிரு மாதங்களில் நிலைமை (கொரோனா பாதிப்பு) எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஸ்டேடியங்களில் கூடிய சீக்கிரம் ரசிகர்களை பார்க்க விரும்புகிறேன். அது நடக்கும் என்று நம்புகிறோம். ஆனால் பொதுமக்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் எப்போதும் எங்களுக்கு முக்கியம்’ என்றார்.