இரவு நேரங்களில் இருமலால் தூங்க முடியவில்லையா? வறட்டு இருமலை குணமாக்கும் எளிய வைத்தியம்!

Photo of author

By Amutha

இரவு நேரங்களில் இருமலால் தூங்க முடியவில்லையா? வறட்டு இருமலை குணமாக்கும் எளிய வைத்தியம்! 

குளிர்காலம் ஆரம்பித்தாலே சிலருக்கு இருமல் பிரச்சனையும் தானாக ஆரம்பிக்கும். அதிலும் இரவு நேரங்களில் இந்த பிரச்சனை வந்து நம்மளுடைய தூக்கத்தை கெடுப்பதோடு மட்டுமில்லாமல் பக்கத்தில் உள்ளவர்களின் தூக்கத்தையும் சேர்த்து கெடுக்கும். தொடர்ந்து இருமும் போது தொண்டையில் மற்றும் மார்பில் வலி உண்டாகும்.

இந்த வறட்டு இருமலை மூன்றே நாளில் சரியாக்கும் இயற்கை வைத்திய முறையை பார்ப்போம்.

1. ஒரு வாணலியை எடுத்து அதில் அரை ஸ்பூன் மிளகை வறுக்கவும். மிளகு காரம் என நினைப்பவர்கள் பத்து மிளகை கூட எடுத்துக் கொள்ளலாம். மிளகு இருமலுக்கு சரியான அருமருந்து.

அடுத்து இதனுடன் 10 கிராம்பையும் சேர்த்து ஈரம் போக வறுக்கவும். இதை இஞ்சி பூண்டு இடிக்கும் கல்லில் நன்றாக பவுடர் போல் இடித்துக் கொள்ளவும்.

அடுத்து இஞ்சியை தோல் நீக்கி துருவி அரை ஸ்பூன் இஞ்சி சாறு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு சிறிய கப்பில் இடித்த மிளகு பவுடர் அரை ஸ்பூன், அரை ஸ்பூன் இஞ்சி சாறு, ஒரு ஸ்பூன் தேன், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.

இதை பெரியவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் அளவும், சிறியவர்கள் அரை ஸ்பூன் அளவும்  சாப்பிட்டு வர வேண்டும். இது சற்று காரமாகத்தான் இருக்கும். இந்த காரத்தன்மை தான் இருமலை குணப்படுத்தும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிட வேண்டாம்.

இதை இரவு தூங்கச் செல்லும் முன் சாப்பிட வேண்டும். அன்று இரவு நன்றாக தூக்கம் வரும். தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வர இருமல் பிரச்சனை சுத்தமாக இருக்காது.

2. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். பிறகு அதில் 10 துளசி இலைகளை அலசி போடவும். ஒரு துண்டு இஞ்சி சேர்க்கவும். இரண்டு ஏலக்காய்களை சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் இறக்கி ஒரு டம்ளரில் வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் தேன் கலந்து அருந்தவும். இந்தப் பானம் இருமலை கட்டுக்குள் வைக்கும். இதை இருமல் வரும் பொழுது இரவு நேரம் பகல் நேரம் என எந்த வேளைகளிலும் தயார் செய்து அருந்தலாம்.