அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? அதை சுலபமாக குணமாக்கும் வழி!

0
90

அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? அதை சுலபமாக குணமாக்கும் வழி! 

சில பேருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கலாம். இரவு நேரங்களில்  சிலருக்கு இது அதிகம் இருக்கும். வீட்டில் என்றால் கூட பரவாயில்லை. ஏதேனும் வெளியே விருந்துக்கோ, விசேஷங்களுக்கு சென்ற இடத்தில் இது மாதிரி பிரச்சனை ஏற்படும் போது தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகும்.

ஒரு நாளைக்கு 4முதல் 5 முறை சிறுநீர் கழிப்பது என்பது இயல்பானது. இதுவே 8 முறைக்கு மேலே சென்றால் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதிகம் சிறுநீர் வெளியேற முக்கிய காரணம் சர்க்கரை வியாதி. இந்த வியாதி இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற பிரச்சனை  ஏற்படும். இதை கட்டுக்குள் வைக்க ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டியது அவசியம்.

சிலருக்கு சர்க்கரை வியாதி இல்லாமல் போனாலும் வயதான காரணங்களினால் ஹார்மோன் மாற்றங்களால் இந்த பிரச்சனை ஏற்படும்.  அடுத்து உணவில் உப்பை அதிகம் சேர்ப்பவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும். உணவில் உப்பின் அளவு சரியாக பராமரிப்பது அவசியம். மேலும் குளிர் காலங்களிலும் மழை காலங்களிலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதிக ஆல்ஹகால் மற்றும் அதிக டீ மற்றும் காபி குடிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படும். பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் காலங்களில் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும். மேலும் ஹார்மோன் ஏற்ற இறக்க  பிரச்சனை கர்ப்ப காலம் போன்ற சமயங்களில் இந்த பிரச்சனை அதிகம் இருக்கும்.

வலிப்பு நோய்க்கு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு அந்த மாத்திரைகள் கூட அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினையை உருவாக்கலாம். மேலும் சிறுநீரகங்களில் கல் மற்றும் அழற்சி பிரச்சனை உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் ஏற்படும்.

இதை தவிர்க்கும் இயற்கையான வைத்திய முறை:

உங்களுக்கு சர்க்கரை வியாதி இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால் இந்த வைத்திய முறைகளை பின்பற்றி வர சரியாகும்.

1. ஒரு கைப்பிடி அளவு கொள்ளை வாணலியில் வறுத்து அதை வெல்லத்துடன் சாப்பிட்டு வர சரியாகும்.

2. இதே போல் எள்ளையும் வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட இந்த பிரச்சனை சரியாகும்.

3.  5 அல்லது 6 துளசி இலைகளை அலசி காலை வெறும் வயிற்றில் தேன் கலந்து  தினமும் சாப்பிட்டு வர அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு படிப்படியாக குறையும்.

4. மாதுளம் பழத்தின் தோலை உப்பு நீரில் அலசிவிட்டு அதை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதை குடித்து வர எந்த பிரச்சனை சரியாகும்.

5. வாராவாரம் எண்ணெய் தேய்த்து குளிப்பது இந்த பிரச்சனைக்கு மிகவும் நல்லது.

6. சாதத்துடன் நெய் கலந்து சாப்பிடலாம். இதே போல் தயிரையும் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

7. ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் இரண்டையும் ஒரு பவுலில் எடுத்துக் கொண்டு அதை டபுள் பாய்லிங்  முறையில் சூடு செய்து தொப்புளை சுற்றி வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது தடவவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்த பின் குடித்தால் நல்லதொரு பலன் கிடைக்கும்.