கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையா… கொசுக்கலை விரட்ட சில இயற்கையா வழிகள் இதோ… 

Photo of author

By Sakthi

 

கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையா… கொசுக்கலை விரட்ட சில இயற்கையா வழிகள் இதோ…

 

நம் வீட்டில் அதிகமாக இருக்கும் கொசுக்களை விரட்டுவதற்கு சில எளிமையான இயற்கையான வழிமுறைகளைப் பற்றி பார்க்கலாம்.

 

நம்முடைய வீட்டில் கொசுக்கள் அதிகமாக இருக்கின்றது. இந்த கொசுக்கள் நம்மை கடிக்கும் பொழுது நமக்கு பல உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றது. கொசுக்கள் நம்மை கடிப்பதால் டெங்கு காய்ச்சல் முதல் தீராத பல கொடிய நோய்கள் ஏற்படுகின்றது. பல கொடிய நோய்களை ஏற்படுத்தும் இந்த கொசுக்களை விரட்ட சில இயற்கையான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.

 

கொசுக்களை விரட்ட சில இயற்கையான வழிமுறைகள்…

 

* புதினாவை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை வீடு முழுவதும் தெளித்து விட்டால் இதன் வாசனைக்கு கொசுக்கள் வீட்டில் இருந்தால் பறந்து விடும். மேலும் கொசுக்கள் வீட்டினுள் வராது.

 

* தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு லாவண்டர் எண்ணெய் கலந்து சருமத்தில் தேய்த்துக் கொண்டால் கொசுக்கள் நம்மை நெருங்காது.

 

* யூகலிப்டஸ் இலைகளை வெயிலில் காயவைத்து அதை வைத்து வீடு முழுவதிலும் செல்லுமாறு புகை போட்டால் வீட்டினுள் கொசுக்கள் வராது.

 

* பூண்டு எண்ணெய் மற்றும் தண்ணீர் இண்டையும் எடுத்து ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் கலந்து வீட்டின் ஜன்னல்களில் வைத்தால் கொசுக்கள் வீட்டினுள் வராது.

 

* வேப்ப எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் ஒன்றாக கலந்து நம் உடலில் தேய்த்துக் கொண்டால் கொசுக்கள் நம்மை நெருங்காது.

 

* வேப்ப எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை வீடு முழுவதும் தெளிப்பதன் மூலமாகவும் கொசுக்கள் வீட்டினுள் வருவதை தடுக்கலாம்.

 

* எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் இதில் கிராம்பை சொறுகி வைத்து வீட்டில் ஆங்காங்கே வைத்தால் போதும். இதிலிருந்து வரும் வாசனை கொசுவை விரட்டும்.