உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா… நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில வழிமுறைகள்… 

0
33

 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா… நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில வழிமுறைகள்…

 

நம் உடலில் குறைவாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 

நமக்கு ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காரணம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பது தான். நாம் அனைவரும் தற்போதைய காலத்தில் நேய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். பல ஊட்டச் சத்துக்களை அளிக்கும் உணவுகளை உண்பதற்கு நாம் இன்றைய காலத்தில் மறந்து விட்டோம். இதனால் சத்து கிடைக்காத உணவுகளை சாப்பிட்டு நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை நாமே குறைத்து விடுகின்றோம்.

 

இந்த பதிவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில இயற்கையான அதே சமயம் எளிமையான வழிமுறைகள் பற்றி தெரிந்து கெள்ளலாம்.

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில வழிமுறைகள்…

 

* நெல்லிச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றுடன் மஞ்சள் பொடியை சேர்த்து குடிப்பதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

 

* நாம் தினசரி எடுக்கும் உணவில் இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் அகியவற்றை எடுத்துக் கெள்ளலாம்.

 

* ஒரு டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, கால் ஸ்பூன் மிளகுத் தூள், 5 கிராம் கிராம் இஞ்சி சாறு, 5 கிராம் அதிமதுரம் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்த பாத்திரத்தில் போட்டு அதை கொதிக்க வைத்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

* சத்துள்ள பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி மற்றும் சிட்ரஸ் அமிலங்கள் அதிகம் உள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

 

* காலை, மாலை என இரண்டு வேலைகளிலும் சூரிய ஒளியில் நாம் நிற்க வேண்டும். சூரிய ஒளி நம் உடலில் படும்படி நிற்க வேண்டும்.

 

* தினசரி 20 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.