இதோ தீராத தலைவலி மற்றும் தலை பாரத்திற்கு உடனடி தீர்வு!!

0
283
#image_title

இதோ தீராத தலைவலி மற்றும் தலை பாரத்திற்கு உடனடி தீர்வு!!

சளி, தலைவலி, தும்மல் என அனைத்தும் இருக்கும்போது தலை பாரம் ஏற்படும். மூக்கில் இருந்து நீர் வடிதல், தும்மல் இவை எல்லாம் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. இதனால் உண்டாகும் தலைபாரமானது சீக்கிரமாக சரியாவதில்லை. மேலும் நெற்றியின் இரண்டு பக்கத்திலும் காற்று சிற்றிலைகள் உள்ளன. குளிரின் தாக்குதலால் இவற்றின் உள்பக்க ஜவ்வானது வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில் சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதாலும் தலைவலி ஏற்படுகிறது. தலையில் நீர் சேர்வதால் தலைவலி, தலைபாரம் வரக்கூடும். இத்தகைய தலைவலி, தலைபாரம் போக இந்த எளிய சித்த வைத்திய முறையில் ஆவி பிடித்தால் எப்படிபட்ட தலைவலி மற்றும் தலைபாரம் நீங்கி விடும்.

தேவையான பொருட்கள்

வேப்பிலை       1 கைப்பிடி

துத்தி இலை      1 கைப்பிடி

நொச்சி இலை   1 கைப்பிடி

நுணா இலை    1 கைப்பிடி

நாயுருவி இலை      1 கைப்பிடி

வில்வ இலை   1 கைப்பிடி

மஞ்சள் தூள்    50 கிராம்

இவற்றை எல்லாம் சேர்த்து 5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், தலை வலி, தலை பாரம் குணமாவதுடன்  காதில் சீழ் வடிதல், காது மந்தம், காது நோயினால் உண்டாகும் கப நோய் என காது சம்பந்த பட்ட நோய்களும் குணமாகும்.

Previous articleசைனஸ் பிரச்சனையால் ஒரே அவதியா?? எளிமையான வீட்டு வைத்தியம்!!
Next articleடயாலிசிஸ் இருந்து முழுமையாக விடுபட சிறந்த மூலிகைகள்!! இவ்வாறு பயன்படுத்துங்கள்!!