சைனஸ் பிரச்சனையால் ஒரே அவதியா?? எளிமையான வீட்டு வைத்தியம்!!

0
166
#image_title

சைனஸ் பிரச்சனையால் ஒரே அவதியா?? எளிமையான வீட்டு வைத்தியம்!!

 

நம் முகத்தில் ஏற்படும் சைனஸ் பிரச்சனையை முழுவதுமாக குணப்படுத்த இந்த பதிவில் எளிமையான வீட்டு வைத்தியத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

சைனஸ் நோய் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். நம் முகத்தை சுற்றிலும் நான்கு ஜோடி காற்றுப்பைகள் உள்ளது. இந்த காற்று பைகளை அல்லது அறைகளை சைனஸ் அறைகள் என்று அழைக்கின்றோம். இந்த சைனஸ் அறையில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் நீர் கோர்த்து சளி திரவம் தேங்கி நிற்க ஆரம்பிக்கும். இதனால் அடிக்கடி சளி பிடித்தல், மூக்கில் சளி வடிதல், தொடர் தும்பல், இருமல், காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் வரும். பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் சூடு அதிகமாக உள்ளவர்களுக்கும், அலர்ஜி சார்ந்த பிரச்சனை இருப்பவர்களுக்கும் இந்த சைனஸ் நோய் தொற்று தோன்றும். மாதக் கணக்கில் நமக்கு பிரச்சனையை தரும் இந்த சைனஸ் பிரச்சனையை ஒரு சில எளிமையான வீட்டு வைத்தியங்களை வைத்தே குணமாக்கலாம்.

 

சைனஸ் பிரச்சனையை குணமாக்க கூடிய வீட்டு வைத்திய முறைகள்…

 

1. ஆவி பிடித்தல்

 

வெதுவெதுப்பான நீரில் 4லிருந்து 5 சொட்டு யூகளிப்டஸ் எண்ணெயை விட்டு ஆவி பிடிக்க வேண்டும். இவ்வாறு ஆவி பிடிப்பதால் மூக்கில் சளி ஒழுகுதல், தலைவலி, தலை பாரம் போன்று சைனஸினால் ஏற்படும் பல பிரச்சனைகள் குணமாகும். இந்த யூகளிப்டஸ் ஆயிலில் உள்ள சத்துக்கள் சுவாசப் பாதையில் இருக்கும் கிருமிகளை அழிக்கும். சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் 2 முறை ஆவி பிடிக்க வேண்டும்.

 

2. ஜலநெட்டி

 

இதை செய்ய நெட்டிபார்ட் எனப்படும் கப் மருந்துக்கடைகளில் அல்லது ஆன்லைனில் கிடைக்கும். இதை வாங்கி இதில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை சேர்த்து அதில் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த ஜல நெட்டியை நின்று கொண்டும் அல்லது உட்கார்ந்து கொண்டும் செய்யலாம். ஒரு புறம் நின்று தலையை ஒரு பக்கமாக சாய்த்து இந்த உப்பு கரைந்த தண்ணீரை மூக்கின் ஒரு துவாரத்தின் வழியாக விட வேண்டும். இந்த தண்ணீர் மறு துவாரத்தின் வழியாக வெளியே வரும். இந்த ஜல நெட்டியை செய்யும் பொழுது வாய் வழியாகத்தான் மூச்சு விடவேண்டும். இந்த ஜலநெட்டி செய்வதால் மூக்கினுள் உள்ள அழுக்கு, தூசி, கிருமிகள் அனைத்தும் வெளியே வந்துவிடும். சைனஸ் கிருமிகளையும் இது வெளியேற்றி சைனஸ் பிரச்சனையை முழுவதுமாக குணமாக்க இது பயன்படுகிறது.

 

3. ஆயில் பாத்

 

சைனஸ் பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிற காரணம் உடல் சூடு ஆகும். உடல் சூடு கானணமாக சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த உடல் சூட்டை குறைக்க வேண்டும். உடல் சூடு அதிகம் உள்ள நபர்கள் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெயுடன் நொச்சி இலையை சேர்த்து காய்ச்சி அதை வடிகட்டி தலைக்கு தேய்த்து குளித்து வரலாம். இவ்வாறு செய்யும் பொழுது தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை குணமாகின்றது. அஜீரணம், மலச்சிக்கல், செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கும் உடல் சூடு அதிகரிக்கும். இதை தடுக்க தினமும் இரவு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்பூண் கடுக்காய் பொடியை சாப்பிட்டு வரலாம். இவ்வாறு செய்வதால் வயிற்றில் இருக்கும் கிருமிகள் வெளியேறுகின்றது. செரிமானப் பிரச்சனைகள் சரியாகி உடல் சூடும் குறைந்து சைனஸ் பிரச்சனையும் குணமடைகின்றது.

 

4. அவாய்டு அலர்ஜி

 

அலர்ஜியானது சைனஸ் பிரச்சனை உண்டாவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. பலவிதமான அலர்ஜிகள் ஏற்படும். ஒரு சிலருக்கு அதிக காற்று தூசியினால் அலர்ஜி ஏற்படும். ஒரு சிலருக்கு வீட்டில் சமையல் செய்யும் பொழுது தாலிக்கும் பொழுது அலர்ஜி ஏற்படும். ஒரு சிலருக்கு வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் காரணமாக அலர்ஜி ஏற்படும். இன்னும் ஒரு சிலருக்கு எடுத்துக் கொள்ளும் உணவுகளால் கூட அலர்ஜி உண்டாகும். சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் எதனால் அலர்ஜி ஏற்படுகிறது என்பதை அறிந்து அலர்ஜி ஏற்படுவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

 

5 அவாய்டு மியூக்கோ புட்ஸ்

 

அதாவது சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் சளி பிடிக்கும் வகையில் இருக்கும் உணவுப் பொருள்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள், துரித உணவுகள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், அதிக காரமான உணவுகள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் எல்லாவற்றையும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் ஆகும்.

 

இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இந்த மருத்துவ முறைகளை சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் செய்து பாருங்கள். சைனஸ் பிரச்சனை சரியாகி விடும்.