வறண்ட சருமத்தை பொலிவுறச் செய்யும் கருவேப்பிலை!!! இதனுடன் இன்னும் சில பக்கங்களை சேர்த்து இப்படி பயன்படுத்துங்க!!!

0
23
#image_title
வறண்ட சருமத்தை பொலிவுறச் செய்யும் கருவேப்பிலை!!! இதனுடன் இன்னும் சில பக்கங்களை சேர்த்து இப்படி பயன்படுத்துங்க!!!
நம்முடைய வறண்ட சருமத்தை மீண்டும் பொலிவுறச் செய்ய இந்த பதிவில் கருவேப்பிலையுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கருவேப்பிலை என்பது பல நன்மைகள் கொண்ட ஒரு பொருள் ஆகும். இதை சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது நமக்கு பல நன்மைகளை தரும். அதே போலீஸ் சருமத்திற்கு பயன்படுத்தினாலும் பல நன்மைகளை தரும். மேலும் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் கருவேப்பிலை மருந்தாக பயன்படுகின்றது.
இந்த கருவேப்பிலையை வைத்து நாம் நம்முடைய வறண்ட சருமத்தை மீண்டும் பொலிவுறச் செய்யலாம். வறண்ட சருமத்தை பொலிவுறச் செய்வதற்கு கருவேப்பிலையுடன் ஒரு சில பக்கங்களை சேர்த்து பயன்படுத்த வேண்டும். அது என்னென்ன பொருட்கள் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்…
* கருவேப்பிலை
* மருதாணி
* தண்ணீர்
செய்முறை…
முதலில் கருவேப்பிலையை வெயிலில் காய வைக்க வேண்டும். அதே போல மருதாணி இலையையும் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் கருவேப்பிலையை தனியாக அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அதன். பின்னர் மருதாணி இலையை அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இது கடினமாக இருந்தால் நாட்டு மருந்து கடைகளில் கருவேப்பிலை பொடி மற்றும் மருதாணி பொடி கிடைக்கும். அதை வாங்கிக் பயன்படுத்தலாம்.
இதையடுத்து ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளை வேண்டும். பின்னர் கருவேப்பிலை பொடி அரை தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் மருதாணி பொடியை அரை தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளை வேண்டும். அதன் பின்னர் இதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை முகத்தில் தேய்த்துக் கொண்டு சிறிது நேரம் கழிந்து முகத்தை கழுவலாம். இதை தவிர்த்து செய்து வந்தால் வறண்ட சருமம் மீண்டும் பொலிவாக மாறும்.