பெற்றோரின் கவனக்குறைவு!! குழந்தைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
133

பெற்றோரின் கவனக்குறைவு!! குழந்தைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டுப்பாளையத்தில் வசிப்பவர் தான் அப்பாஸ் என்பவர். இவரது மனைவியின் பெயர் சிம்ரான். இவர்கள் இருவருக்கும் சையத் அத்னான் என்ற மூன்று வயதுடைய குழந்தை உள்ளது.

இந்த குழந்தையின் தாயான சிம்ரான் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் போது தனது குழந்தையையும் தூக்கிக் கொண்டுதான் செல்வார்.

எனவே ஜூலை இரண்டாம் தேதி அன்று வழக்கம் போல் தனது குழந்தையான சையத் அத்னானை அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது பக்கத்தில் இருக்கும் ஒரு தோட்டத்தில் குழந்தையை விட்டு விட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது குழந்தை சையத் அத்னான் அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவை எடுத்து அதனுள் தண்ணீரை நிரப்பி குடித்து விட்டான். இதனால் அவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அருகே உள்ள அந்தியூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இங்கு காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், குழந்தையை மேல் சிகிச்சைக்காக சையத் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கும் சிகிச்சை பயனளிக்காத காரணத்தினால் குழந்தை சையத் அத்னான் உயிர் பிரிந்து விட்டது. இதனால் பெற்றோர்களும், உறவினர்களும் அதிர்ச்சியில் கதறினர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது நடந்ததற்கு பெற்றோரின் கவனக்குறைவை காரணம் கூறுவதா? இல்லை குழந்தை இருக்கும் இடத்தில் யார் அந்த பூச்சிக்கொல்லி டப்பாவை போட்டது என்று தேடுவதா? ஒன்றும் புரியாமல் அனைவரும் தவிக்கின்றனர்.

Previous articleதிடீரென பேசுவதை நிறுத்திய மாணவி!! ஆத்திரத்தில் பட்டபகலில் வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!! 
Next articleபயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வந்தே பாரத் உள்பட ரயில்களில் கட்டணம் குறைப்பு !!