கரீபியன் லீக் : நிகோலஸ் பூரனின் அதிரடி சதத்தால் வெற்றி பெற்ற அமேசான் வாரியர்ஸ் அணி

0
154

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த மற்றுமொரு ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் அணியும், அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற அமேசான் வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த செயின்ட் கிட்ஸ் அணி 5 விக்கெட் இழந்து 150 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி செல்வா 59 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய அமேசான் வாரியர்ஸ் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 எடுத்து 7 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 45 பந்துகளில் சதம் அடித்தார்.

Previous articleகரீபியன் லீக் : மோசமான தோல்வியை சந்தித்த பார்படாஸ் அணி
Next articleஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : சாதனையை சமன் செய்து விடுவாரா?