கரீபியன் லீக் : 89 ரன்களில் சுருண்ட பார்படாஸ் அணி

0
194

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் அமேசான் வாரியர்ஸ் அணியும், பார்படாஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற அமேசான் வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பார்படாஸ் அணி 20 ஓவருக்கு 9 விக்கெட் இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய அமேசான் வாரியர்ஸ் அணி 14.2 ஓவரிலேயே 90 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட்மயர் 32 ரன்கள் அடித்தார்.

Previous articleதேர்தலில் பாஜகவின் முகமாக அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கீடு! திமுகவை விழிபிதுங்க செய்வாரா?
Next articleஇந்த மாத இறுதியில் சசிகலா வெளி வருகிறார்? வழக்கறிஞர் தகவலால் அதிமுக வட்டாரங்கள் அதிர்ச்சி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here