கரீபியன் லீக் ஹெட்மயர் அபாரம்

Photo of author

By Parthipan K

கரீபியன் லீக் ஹெட்மயர் அபாரம்

Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் அமேசான் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த செயின்ட் கிட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லிவிஸ் 30 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய அமேசான் வாரியர்ஸ் அணி 7 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹெட்மயர் 71 ரன்களை குவித்தார்.