கரீபியன் லீக் : 112 ரன்களுக்கு சுருண்ட ஜமைக்கா அணி

0
118

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பார்படாஸ் அணியும், ஜமைக்கா அணியும் மோதின. டாஸ் வென்ற ஜமைக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பார்படாஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மெய்ர்ஸ் 85 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய ஜமைக்கா அணி 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் பார்படாஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Previous article6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு?
Next articleஅம்மி, ஆட்டுக்கல் வீட்டில் இந்த இடத்தில் இருந்தால் பண கஷ்டம் வரும்!