கரீபியன் லீக் : சோதிக்கும் மழை கைவிடப்பட்ட போட்டி

0
198

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில்  ஜமைக்கா அணியும், செயின்ட் கிட்ஸ் அணியும் மோதின. இந்திய நேரப்படி இரவு 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஜமைக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய செயின்ட் கிட்ஸ் அணி 5.4 ஓவருக்கு 46 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் நீண்ட நேரம் மழை பெய்த காரணத்தால் போட்டி கைவிடப்பட்டது.

Previous articleகாக்கா முட்டை பட ஹீரோ பிரபல சின்னத்திரை நடிகை மீது காதலா? இன்ஸ்டாகிராம் மூலம் தூது!
Next articleதேர்தலில் பாஜகவின் முகமாக அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கீடு! திமுகவை விழிபிதுங்க செய்வாரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here