கரிபியன் லீக்: இறுதிபோட்டிக்குள் நுழைந்த நைட் ரைடர்ஸ் அணி

0
207

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து முன்று மாதங்களாக எந்தவித போட்டியும் நடைபெறவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கு இந்திய தீவில் கரிபியன் பிரிமீயர் லீக் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியது. முதலாவது அரைஇறுதியில் ஜமைக்கா தல்லாவாஸ்-டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட் செய்த ஜமைக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 107 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர்கள் அகியல் ஹோசின் 3 விக்கெட்டும், காரி பியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த எளிய இலக்கை டிரின்பாகோ அணி 15 ஓவர்களில் எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

 

 

Previous articleசக்தி வாய்ந்த அணியாக மாறுமா பெங்களூரு அணி?
Next articleரஷ்யாவிலும் வேகமெடுத்து வரும் கொரோனா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here