கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் தலைமறைவு!! போலீசார் வலைவீச்சு!!

Photo of author

By Savitha

கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் தலைமறைவு!! போலீசார் வலைவீச்சு!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சிறுமி காது வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில்.

தனது தாயுடன் வர்க்கலா புத்தன்சந்தை பகுதியில் உள்ள டாக்டர் பி.சுரேஷ்குமாரிடம் சிகிச்சைக்கு சென்றார்.

ஆனால், காதுக்குள் பரிசோதனை என்ற பெயரில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டிற்கு சென்ற பிறகு, தனது தாயிடம் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோரால் வர்க்கலா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

வர்கலா போலீசார் மருத்துவர் மீது குற்ற எண் 690 மற்றும் மைனர் பெண் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு, தலைமறைவான மருத்துவரை தேடி வருகின்றனர்.