வீட்டில் இருக்கும் ரொக்கம்!! வருமான வரித்துறை அபராதம்!!
முன்பெல்லாம் நாம் அனைவருமே எதை வாங்குவதற்கும் பணத்தை மட்டுமே பயன்படுத்தி வந்தோம். எப்பொழுதும் கையில் பணம் வைத்து கொண்டே இருக்க வேண்டும் எல்லா இடங்களிலும் பணம் மட்டுமே செலுத்த வேண்டும். கையில் அதிக பணம் வைத்திருக்கும்போது அது தொலைந்து போவதற்க்கான வாய்ப்புகளும் இருந்தன. அனால் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் இது போன்ற தொந்திரவுகள் இல்லை.
ஆனாலும் கையில் பணமே இல்லாமலும் இருக்க முடியாது. இன்னமும் சிறு சிறு கடைகளில் எல்லாம் பண பரிவர்த்தனை மட்டுமே. இதற்காக கையில் பணம் வைத்திருப்பது அவசியமாகிறது. ஒருவர் வீட்டில் சட்டப்படி எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதை பார்க்கலாம்.
ஒரு நிதியாண்டில் ரூ. 20 லட்சத்திற்கும் மேல் ரொக்க பரிவர்த்தனை செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
வங்கியில் ரூ. 50000 மேல் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ பான் கார்டு தேவைப்படுகிறது.
2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக செலவு செய்ய முடியாது. 2 லட்சத்திற்கு மேல் பொருட்களை வாங்கும் போது பான் மற்றும் ஆதார் கார்டு கட்டாயம் தேவை.
30 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள சொத்துகளை வாங்குவதோ அல்லது விற்பதோ வருமான வரித்துறை கண்காணிப்பில் வரும்.
தனிநபர் ஒருவரிடமிருந்து 20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக கடன் வாங்க முடியாது. அதே போல் 2 ஆயிரத்திற்கு மேல் தானமாக வழங்க கூடாது.
ஒருவர் வருமான வரிச் சட்டத்தில் கூறப்பட்ட தொகையை விட அதிக தொகையுடன் பிடிபடும்போது, அந்த தொகைக்குரிய முறையான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், அத்தொகைக்கு 137 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும் என வருமான வரிச் சட்டம் கூறுகிறது.