ஏடிஎம்மில் புதிய விதிகள் மே 1 முதல் அமல்! பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு

0
139
Effective from 1st May, Punjab National Bank Notification
Effective from 1st May, Punjab National Bank Notification

ஏடிஎம்மில் புதிய விதிகள் மே 1 முதல் அமல்! பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய விதி முறைகளை மே 1 முதல் அமல்படுத்தி உள்ளது. இந்த புதிய விதிகளின் மூலம் இனி வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும், மே 1 மாத தொடக்கத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய கட்டண விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

எனவே, வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் தெரியாவிட்டால், இந்த கட்டணச் சுமையை வாடிக்கையாளர்களே சுமக்க நேரிடும் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுப்பவர்கள் நிச்சயம் இதனை தெரிந்து கொள்வது அவசியம். மேலும் தனது வங்கி கணக்கில் பணம் உள்ளதா இல்லையா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும். ஏடிஎம்களுக்கு சென்று வங்கி பேலன்ஸ் சரிபார்க்காமல் பண பரிவர்த்தனை செய்யக்கூடாது.

அதாவது, உங்கள் வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லாத நிலையில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முயன்றால் முயற்சி தோல்வியடையும் மேலும் தங்களது வங்கி கணக்கில் இருந்து குறைவான பணம் இருப்பதன் காரணமாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ 10, மற்றும் அதனுடம் சேர்த்து ஜிஎஸ்டியும் சேர்த்து கட்டணமாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை தவிர மேலும் சில சேவை கட்டணங்களை அதிகரிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றனர், அதன்படி டெபிட் கார்டு அல்லது ப்ரீபெய்டு கார்டுகளின் வருடாந்திர கட்டணம் மற்றும் பராமரிப்பு கட்டணம் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. மேலும், பிஓஎஸ் மெஷின் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் நடைபெறும் இ-காமர்ஸ் பரிவர்த்தனை கட்டணம் உயர்த்ததப்பட உள்ளது.

மறுபுறம், ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியுற்று உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டால், அதை மீண்டும் ஒரு வார காலத்திற்கு உங்கள் வங்கி கணக்கிற்கு திரும்பிவிடும். இல்லையேல் புகார் தெரிவிக்கலாம், புகார் அளித்து ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை இல்லையென்றால், ரூ 100, அபராதம் வங்கியால் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

எனவே, பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் இந்த புதிய விதி முறைகளை தெரிந்துகொள்ளவேண்டும்.

author avatar
Parthipan K