சைபர் குற்றங்களை எதிர்க்கும் யுக்தி 2.0: தேசிய அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டி

Cybercrime Strategy 2.0: National-level mega cyber hackathon competition

ஆன்லைன் வழியான குற்றங்களை கண்டறியும் மற்றும் தடுக்கும் நோக்கில் சி.பி.சி.ஐ.டி-யால் நடத்தப்பட்ட அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டியானது இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.பெருகி வரும் சைபர் குற்றங்கள் மட்டுமல்லாது தற்போது மரபுவழி குற்றங்களில் கூட இணைய வெளியைப் பயன்படுத்தி எதிரிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் என்று, அனைத்து வகையான குற்றங்களிலும் இணைய பயன்பாடு பெருமளவு உள்ளது. வழக்குகளை விசாரிப்பதிலும், குற்றங்களை கண்டறிவதிலும் ஏற்படும் தடைகளை களைவதற்கும், டார்க் வெப் வழி நடைபெறும் … Read more

போடு பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள முதல் 5 தொகுதி வெளியானது…. டாப் லிஸ்ட் எது தெரியுமா….!

தமிழகம் முழுவதும் அதிமுக–பாஜக கூட்டணி தீவிரமாக களத்தில் இறங்கியுள்ள நிலையில், தற்போது பாஜக–அதிமுக கூட்டணியில் குறைந்தது 56 இடங்கள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் மத்திய உளவுத்துறை தீவிரமாக பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கணித்து இருக்கிறதாம். இதில் முதல் 5 இடங்கள் எவை என்றும், வேட்பாளர் யார் என்ற தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. இதில் முதல் இடத்தில் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி பகுதி இடம்பிடித்துள்ளது. இந்த தொகுதி … Read more

மீண்டும் நீரில் மூழ்கிய சென்னை — திமுக அரசின் “மழைக்கு தயாரான நகரம்” வாக்குறுதி என்னாச்சு 

தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன், சென்னை நகரத்தின் அரசு அமைப்புகளின் செயல்பாடு மீண்டும் சரிந்துவிட்டன என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளது. “மழைக்கு முழுமையாக தயாரானது” என்று தமிழ்நாடு அரசு பலமுறை அறிவித்திருந்தாலும், நகர் முழுவதும் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சேதமான சாலைகள், நின்று போன போக்குவரத்து, மற்றும் கடும் அவலத்தில் இருக்கும் பொதுமக்கள் — ₹4,000 கோடி செலவிட்டதாக கூறப்படும் புயல் நீர் வடிகால் திட்டங்கள் எவ்வளவு பலனளித்தன என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் “97% … Read more

மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் தொடரும் மரணங்கள் – வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய திமுக

மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மரணிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வாறு நடக்கும் மரணங்களை தடுக்கும் வகையில் எந்திரங்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அக்கட்சிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது. திமுக அரசின் வாக்குறுதிகள் கேள்விக்குறியாகின்றன தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு, சமூகநீதியின் பெயரில் “மனிதக் … Read more

தூய்மை மிஷன்: ‘கொட்டுனா வலிக்குமா?’ பிரச்சாரம் – தமிழ்நாட்டில் 750 டன் கழிவு பிரிப்பு

thooimai mission 2025

தமிழ்நாடு அரசு 2025-ஆம் ஆண்டு சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் கீழ் தொடங்கிய “தூய்மை மிஷன்”, மாநில அளவில் கழிவு மேலாண்மையை மாற்றியமைக்கும் ஒரு பெரிய முயற்சியாகும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் — மூலத்தில் கழிவு பிரிப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் நிலத்தின் மீது சார்பை குறைப்பது. இதன் மூலம் சுத்தமான மற்றும் பசுமையான தமிழ்நாட்டை உருவாக்க அரசு இலக்காகக் கொண்டுள்ளது. நிர்வாக அமைப்பு மாநில அளவிலான செயலாக்கக்குழுவை முதன்மைச் செயலாளர் தலைமையேற்கிறார். மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட … Read more

தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்கள் மீது போலீஸ் நடவடிக்கை – திமுக இரட்டை முகம் குற்றச்சாட்டு

Police action against sanitation workers in Tamil Nadu – DMK double-faced accusation

தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் மற்றும் நிரந்தர பணிக்கான உரிமைக்காக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் திடீர் நடவடிக்கை மேற்கொண்டது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசின் திடீர் நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, எந்த எச்சரிக்கையும் இன்றி போலீசார் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களை கைது செய்தனர். பெண்கள், வயதானவர்கள், நீண்ட காலமாக தினக்கூலியாக பணியாற்றியவர்கள் என அனைவரும் பலவந்தமாக அங்கிருந்து அகற்றப்பட்டனர். சோர்வால் விழுந்து போன பணியாளர்கள், போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் … Read more

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்! சிலைக்கு பெயிண்ட் ஊற்றியவரை பிடிக்க தனிப்படை! பாலியல் குற்றவாளிக்கு..?

sexually assaulted a 4-year-old girl

திருவள்ளூர் மாவட்டம் சாலையில் நடந்து சென்ற 4 வயது பிஞ்சு குழந்தையை ஒரு காமக்கொடூரன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அங்கிள் என்ன விட்டுருங்க, என்னை அடிக்காதீங்க, என்னை கஷ்டப்படுத்தாதீங்கன்னு அந்த பொண்ணு அழுதுருக்கு. இதை எதையும் பொருட்படுத்தாத அந்த மிருகம் கத்தியை காட்டி அந்த சிறுமியை மிரட்டி சத்தம் போடாதே என்று சொல்லி பாலியல் வன்கொடுமைக்கு அந்த பிஞ்சுக்குழந்தையை ஆளாக்கி இருக்கிறான். பிள்ளையை அடிச்சு வாயெல்லாம் ரத்தம் வரவச்சு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் அந்த … Read more

திமுக கூட்டணியில் இருந்து விலக துடிக்கும் காங்கிரஸ்? தவெகவுடன் கூட்டணியா?

Congress is trying to break away from the DMK alliance? Will it be an alliance with TVK

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக கட்சியையும் தமிழ் நாட்டில் ஆட்சி செய்யும் திமுக கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து அரசியல் பேசி வருகிறார் விஜய். கொள்கை எதிரி பாஜகவுடனும் மற்றும் அரசியல் எதிரி திமுகவுடனும் எப்போதும் கூட்டணி இல்லை என்ற தன்னுடைய இறுதி நிலைப்பாட்டை அண்மையில் சில நாட்களுக்கு … Read more

“அரசியல் டைம்பாஸ் செய்யாதீங்க; முழுமையாக இறங்குங்கள்!” – விஜய்யை தாக்கும்  நடிகை ரோஜா 

Actress Roja

திரையுலகத்தில் வெற்றி பெற்ற நடிகர்கள் அரசியலுக்கு வரும் போதும், அதை முழுமையான பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், தற்போதைய நடிகர்கள் போல் “டைம்பாஸ்” அரசியல் செய்யக்கூடாது என்றும் நடிகையும் ஆந்திரா அமைச்சருமான ரோஜா, நடிகர் விஜய்க்கு நேரடியாக அறிவுரை கூறியுள்ளார். இந்த கருத்துக்கள், நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியான “தமிழக வெற்றிக்கழகம்” எனும் பெயரில் அரசியலுக்கு களமிறங்கியிருக்கும் நேரத்தில் அவரை நேரிடையாக தாக்கும் வகையில் வெளியாகி, அரசியல் … Read more

4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல தடை: உயர் நீதிமன்ற உத்தரவால் பயணிகள் அச்சம்!

Government buses banned from pass at 4 toll plazas: Passengers fear due to High Court order!

சென்னை: தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் செல்ல தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகள் தடை செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, கடந்த காலத்தில் செலுத்தப்பட வேண்டிய சுங்கக் கட்டணங்கள் நிலுவையில் இருந்ததை காரணமாகக் கொண்டு வந்தது. பெரிய அளவில் நிலுவைத் தொகை – பாதிக்கப்பட்ட சாலைகள் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுமார் 70-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் வழக்கம்போல் கட்டணங்கள் … Read more