காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!!

Photo of author

By Parthipan K

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!!

Parthipan K

Updated on:

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!!

காய்ச்சல் என்பது ஒரு வியாதி என்று சொல்ல முடியாது.பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமி நம் உடலைத் தாக்கும் போது இயற்கையிலேயே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை அழித்துவிடும்.அந்த அழிவுப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் காய்ச்சல்.

சாதாரணமாக 3 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும்.அதற்கு மேலும் நீடித்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.முக்கியமாக குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் காய்ச்சல் வந்தால் உடனடியாக பார்க்க வேண்டும்.வைரஸ் பாக்டீரியா பூஞ்சைத் தொற்றுகளின் காரணமாகவோ கொசு,ஈ போன்றவற்றினால் நம் உடலில் உருவாகும் கிருமிகளின் பாதிப்பினாலோ காய்ச்சல் ஏற்படும்.நம் உடலிலுள்ள சில மென்மையான கொலாஜன் திசுக்கள் உடலில் சில நச்சுப் பொருட்களால் அழிக்கப்படும் போதும் காய்ச்சல் வரலாம்.

ஹெச்.ஐ.வி பாதித்தோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் வரலாம்.பெண்களுக்கு சிறுநீரகத் தொற்றின் காரணமாக காய்ச்சல் வரும்.மேலும் காசநோய் இருந்தாலும் காய்ச்சல் வரும். பொதுவாக காசநோய் என்பது இருமல் தான்.காய்ச்சல் வந்தால் இதை செய்யுங்கள்,காய்ச்சல் 100 டிகிரியை தாண்டும் போது சுத்தமான காட்டன் துணியை குளிர்ந்த தண்ணீரில் நனைத்துப் பிழிந்து நெற்றி பகுதிகளில் வைத்துத் துடைத்தாலே 80 சதவிகிதம் குணமடையும். மருந்துகள் என்பவை ஒருவரது வயது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொருத்து வேறுபடும்.

காய்ச்சலுடன் கூடிய தொண்டைக் கரகரப்பு மூக்கடைப்பு போன்றவற்றுக்குத் தாமாகவே மருந்துக்கடைகளை அணுகி ஆன்டிபயாடிக் வாங்கி சாப்பிடக் கூடாது.ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் போது அதை பாதியிலே நிறுத்தவும் கூடாது. முழுவதும் குணமாகும் வரை பரிந்துரைக்கப்பட்ட மொத்த ஆன்டிபயாடிக்கையும் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் காய்ச்சல் விரைவில் குணமடையும்.