சம்மரில் அதிகளவு ஃப்ரிட்ஜ் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.. உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!!

Photo of author

By Divya

சம்மரில் அதிகளவு ஃப்ரிட்ஜ் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.. உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!!

இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ஃப்ரிட்ஜ் உள்ளது.உணவு பொருட்களை பதப்படுத்துவதற்காகவும்,காய்கறிகளை பிரஸாக வைத்து கொள்வதற்காகவும் ஃப்ரிட்ஜ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முக்கியமாக தண்ணீரை கூலிங் செய்ய இவை பயன்படுத்தப்படுகிறது.ஃப்ரிட்ஜ் மூலம் இவ்வளவு விஷயங்கள் நடந்தாலும் அவை என்றுமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் மட்டுமே தரும்.இதில் பதப்படுத்தப்படுத்தி உண்ணும் உணவுகளால் உடலில் கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோய்கள் உருவாகி விடும்.

கோடை காலத்தில் தான் அதிகளவு ஃப்ரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடலை குளுமையாக்கி கொள்ள ஃப்ரிட்ஜில் தண்ணீர்,பழச்சாறு போன்றவை வைத்து குளிர்விக்கப்பட்டு அருந்தப்படுகிறது.இதனால் உடல் ஆரோக்கியம் மோசமாகும்.

உடலில் வெப்பநிலை சீராக இயங்கி கொண்டிருக்கும் சமயத்தில் குளிர்ந்த நீர் அருந்தினால் அவை செரிமான மண்டலத்தை பாதிக்கும்.இதனால் மலச்சிக்கல் உருவாகி பல தொந்தரவுகளை ஏற்படுத்தி விடும்.

குளிர்ந்த நீரை குடிப்பதினால் தொண்டையில் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.அதேபோல் தொண்டை வீக்கம்,கரகரப்பு.மூக்கடைப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட நீரை அருந்தி வந்தால் உடல் பருமன் ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

ஒருசில சிலருக்கு குளிர்ந்த நீர் இதயத்திற்கு செல்லக் கூடிய நரம்பு மண்டலத்தை பாதித்து இதய துடிப்பை குறைத்து விடும்.இதனால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.குளிர்ந்த நீர் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.குளிர்ந்த நீர் குடிப்பது வழக்கமானால் பல் சொத்தை,பல் கூச்சம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.