சிபிஎஸ்இ மாணவர்கள் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்’ -மத்திய அரசு அறிவிப்பு

0
119

சிபிஎஸ்இ மாணவர்கள் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்’ -மத்திய அரசு அறிவிப்பு

CBSE : சிபிஎஸ்இ 1 முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் அதாவது அனைவரும் “ஆல் பாஸ்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 21 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்ற பாதுகாப்பு எண்ணத்திலேயே அத்தியாவசியமற்ற மக்கள் கூடும் அனைத்து பள்ளி கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கும் கட்டாயத் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக தமிழகம், புதுச்சேரி, குஜராத், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அறிவித்தன. மாநில அரசுகளின் திடீர் தேர்ச்சி அறிவிப்பினால் பள்ளி மாணவர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் கீழ் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை படித்து வரும் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெறுவார்கள் என்று ஆல் பாஸ் அறிவிப்பை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளின் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் மேற்கொண்ட பருவத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவார்கள். 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Previous articleகுறிப்பிட்ட நேரத்திலாவது ஒயின்ஷாப்பை ஓப்பன் பண்ணுங்க : ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர்!
Next articleதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கொரோனா பாதிப்பு