குறிப்பிட்ட நேரத்திலாவது ஒயின்ஷாப்பை ஓப்பன் பண்ணுங்க : ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர்!

0
259

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த உத்தரவால் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், தியேட்டர், கோயில்கள், சர்ச்கள், ஒயின் ஷாப்கள், பார்கள், உள்ளிட்டவை அதிரடியாக மூடப்பட்டன. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால் குடிமகன்கள் சாராயம் கிடைக்காமல் அல்லாடி வந்தனர். இவ்வாறு சாராயம் கிடைக்காத காரணத்தால் மது பிரியர்கள் சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளனர்.

மேலும் சில இடங்களில் கள்ள மார்க்கெட்டில் சாராய பாட்டில்களை அதிக விலைக்கு விற்றதாகவும் அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஒரு சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதும் அதை குடித்த சிலர் மோசமாக பதிக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் ‘மாலையில் சில மணி நேரமாவது ஒயின்ஷாப்களை திறக்குமாறு’ அரசிற்கு யோசனை கூறியுள்ளார். இதனால் மது பிரியர்கள் கள்ள சாராயம் குடிப்பதும் தற்கொலை செய்வதும் தடுக்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Previous articleமோடியின் யோசனைக்கு நன்றி சொன்ன அமேரிக்க அதிபரின் மகள் : காரணம் இது தான்!
Next articleசிபிஎஸ்இ மாணவர்கள் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்’ -மத்திய அரசு அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here