சின்னத்திரை பிரபலம் மறைவு! புற்றுநோயால் அதிர்ச்சி!

0
88

சின்னத்திரை பிரபலம் மறைவு! புற்றுநோயால் அதிர்ச்சி!

பிரபல தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.புற்றுநோய் சிகிச்சைக்காக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்த கண்ணனின் உயிர் பிரிந்தது.

90களின் இறுதியில் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன்.சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான இவர் ஆர்.ஜேவாக பணியாற்றி,பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார்.
சன் மியூசிக்கில் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன்.வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்த இவர் 90ஸ் கிட்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர்.

நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார்.
இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கும்,தொகுத்து வழங்கும் பாணிக்கும் தனி ரசிகர் கூட்டம் உருவானது.தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான சிந்துபாத்,விக்ரமாதித்யன் உள்ளிட்ட தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் தான் கற்ற பாரம்பரிய தமிழ்க் கலைகளை மேடை நாடகங்கள்,தெருக்கூத்துகள்,கதைகள் வாயிலாக மலேசிய நாட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கிறார்.

தான் கற்றுக்கொண்ட கிராமியக்கலைகளை ஆனந்தக் கூத்து என்ற பயிற்சி அமைப்பின் மூலம் சொல்லிக்கொடுக்கிறார் அவர்.சன் நெட்வொர்க்கில் தொகுப்பாளராக வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் நா.முத்துசாமி ஐயாவிடம் கூத்துப்பட்டறைப் பயிற்சி எடுத்துக்கொண்டார் அவர்.அப்போதுதான் அவருக்குக் கிராமியக் கலைகளின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது.கரகாட்டம்,ஒயிலாட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமியக் கலைகளை,அனுபவம் பெற்ற பயிற்சியாளர்களிடம் பல ஆண்டுகளாகக் கற்றுக் கொண்டார் அவர்.
ஆனந்த கண்ணன் மறைவிற்கு ரசிகர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றர். இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் சிறந்த நண்பன்,சிறந்த மனிதன் தற்போது இல்லை.அவருக்கு என்னுடைய ஆழந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.