“கிக்கு ஏறுதே” ரஜினி பாடலுக்கு நடனமாடும் மேலூர் செவிலியர்கள்!

0
81

மேலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ரஜினியின் செம ஹிட் பாடலான கிக்கு ஏறுதே பாட்டுக்கு நடனம் ஆடி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

1999 களில் வெளிவந்த படையப்பா படத்தில் கிக்கு ஏறுதே வெட்கம் போனதே பாடல் மிகவும் செம ஹிட்டான பாடல். அந்த பாடலில் உள்ள வரிகளை மாற்றி முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கைகளை கழுவுவது என்பதைப்பற்றி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்தப் பாடலின் மெட்டுகேற்றவாறு நடனமாடிய வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

 

 

https://www.indiatoday.in/trending-news/story/healthcare-workers-in-tamil-nadu-dance-to-rajini-hit-kikku-yerudhey-to-spread-covid-awareness-1841549-2021-08-16?jwsource=cl

 

 

மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் பற்றி திருத்தமாக அந்த பாடலில் கூறியுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மிகவும் அவசியம் என்பதை அந்த பாடலில் உணர்த்தி உள்ளனர்.

 

தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட 1800 புதிய கோரோணா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. அதில் சென்னை கோவை சேலம் ஈரோடு போன்ற பகுதிகளில் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகமாகிக் கொண்டு செல்கிறது.

 

மாநில அரசு எப்பொழுதும் மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றி பொது இடங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

 

செவிலியர்களின் இந்த செயல் மிகவும் பாராட்டத்தக்கதாக மாறியுள்ளது.பாடலின் மூலம் எளிமையாக கொரோனாவில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை பற்றி அவர்கள் உணர்த்திய விதமும் மிகவும் பாராட்டுக்குரியது.

 

author avatar
Kowsalya