இதுதான் பார்ட் டைம் ஜாப்..! ஒரே இரவில் 18 செல்போன்களை பறித்த பலே திருடன்!!
தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்கள் மேலும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பார்க் ஓட்டலில் இருந்து வெளியே வந்ந நபர்களிடம் திடீரென்று செல்போனை பறித்துக் கொண்டு இரண்டு இளைஞர்கள் வாகனத்தில் பறந்துள்ளனர். இரு சக்கர வாகனத்தை சினிமா பாணியில் பின்னாலேயே துரத்திச் சென்று இடித்துள்ளனர். இதனால் திருடர்கள் இருவரும் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தனர்.
வண்டியிலிருந்து கீழே விருந்தவர்களில் ஒருவன் மட்டும் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பித்துவிட்டான். கீழே விழுந்து சிறிது காயம்பட்டதால் ஓடமுடியாமல் ஒருவன் மட்டும் சிக்கினான். பிடிபட்ட திருடனை உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், மாட்டிக் கொண்ட இளைஞர் பழை வண்ணார பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது வெளியானது. மேலும் மணலி பகுதியில் ஒரே இரவில் மட்டும் தொடர்ந்து 18 செல்போன்களை பறித்துள்ளதாகவும் வாக்குமூலத்தில் திருடன் பாலாஜி தெரிவித்துள்ளான். விசாரணையின் முடிவில் அவனிடம் இருந்து பதினெட்டு கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருடன் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து தப்பிச்சென்ற கார்த்தி என்பவனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ரோந்து போலீசார் இருக்கும்போதே இத்தனை அட்டூழியங்கள் நடேந்தேறி வருவது குறிப்பிடத்தக்கது.