இந்த மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் உதவி தொகையா? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!
தமிழக அரசு நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த செய்தி குறிப்பில் தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய, கிறிஸ்துவர், சீக்கிய, புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் அறிவிக்கப்பட்ட நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தப் பள்ளிகளில் நடப்பாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ்-1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழில்கல்வி ,பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயபடிப்பு, இளநிலை ,முதுநிலை ,சட்டப்படிப்புகள் உட்பட பல்வேறு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையான கல்வி உதவித் தொகையும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தகுதியான மாணவ மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை செப்டம்பர் 30 வரையிலும் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகைக்கு அக்டோபர் 31 வரையிலும் மத்திய அரசின் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கல்வி உதவித்தொகை இந்திய அரசின் சிறுபான்மையர் விவகார அமைச்சகத்தால் நேரடி பணம் பரிமாற்றம் மூலம் மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.
மத்திய அரசின் தேசிய கல்வி உதவி தொகை இணையதளத்தில் ஏற்கனவே பதிவிட செய்யப்பட்டுள்ளது கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையதளத்தில் சரிபார்க்க இயலும் எனவும் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர் இணையதளத்தில் எளிதாக விண்ணப்புக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களையும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ மாணவி தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
மேலும் தமிழக அரசு வழிகாட்டி முறைகள்இலக்கீடு, தகுதிகள் ,விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாணவக் கல்வி நிலையங்களுக்கான அவ்வப்போது எழுப்பப்படும் கேள்விகள் இணையம் செயல்படும் முறை மற்றும் நடைபாண்டில் இணையத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய வசதிகள் ஆகவே மேற்கண்ட இணையதளத்தில் தரப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் கல்வி உதவி திட்டத்தின் கீழ் பயன்தரவுள்ள தகுதியான படிப்புகளின் விவரங்களை இணையதளத்தில் காணலாம் எனவும் தெரிவித்துள்ளது.