அடுத்த 2 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு!
கடந்த வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.
மேலும் புதுச்சேரி- ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்த மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.இவை அரபிக்கடல் பகுதிக்கு சென்றது.இந்நிலையில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக கடல் சீற்றத்துடனே காணப்படுகின்றது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு,புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும் மாண்டஸ் புயலிற்கு பிறகு சென்னை புறநகர் தாம்பரம் ,குரோம்பேட்டை ,பல்லாவரம், அனகாபுத்தூர்,பெருங்களத்தூர்,முடிச்சூர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.மேலும் தமிழகத்தில் திருவள்ளூர்,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை ,விழுப்புரம், சென்னை,கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.