இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!
தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 105 டிகிரியை தாண்டியுள்ளது. அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. எனினும் மதிய நேரங்களில் மக்களால் வெளியில் செல்லவே முடிவதில்லை. அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.
ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் ஜூன் 1 ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி தென்காசி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.