நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் பெரிதாக சொல்லும் அளவிற்கு மழை இல்லை. கோடை காலதிற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் இப்பொழுதே பெரும்பாலான ஆறு, ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் காணத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யத் தொடங்கி இருக்கின்றது. தமிழகத்தை நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் நாளை அதாவது பிப்ரவரி 02 ஆம் தேதி தென் மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறைக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.
மேலும் இதற்கு அடுத்த நாட்களில் இருந்து பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.