அதிபர் தேர்தலில் திருட்டுத்தனமான முறையில் வெற்றி பெற வாய்ப்பு

Photo of author

By Parthipan K

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், எதிர்த்தரப்பினர் திருட்டுத்தனமான முறையில் வெற்றி பெறக்கூடும் எனத் தமது குடியரசுக் கட்சியினரை எச்சரித்துள்ளார். கொரோனா சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்கர்களை ஏமாற்றும் முயற்சியில் எதிர்த்தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக அவர் குறைகூறினார். ஜனநாயகக் கட்சி நடத்திய மாநாட்டில், எதிர்மறை அம்சங்கள் நிறைந்திருந்ததாகக் குடியரசுக் கட்சியினர் கூறினர். ஆனால், தங்களது மாநாடு அவ்வாறு இல்லாமல் நடைபெறுமென அவர்கள் உறுதி கூறினர். இதுவரை வெளியிடப்பட்ட முன்னோடிக் கருத்துக் கணிப்புகளில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் (Joe Biden) முன்னணி வகித்து வருகிறார்.