17ம் தேதி வரை தமிழகத்தில் தொடர் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Photo of author

By Janani

17ம் தேதி வரை தமிழகத்தில் தொடர் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Janani

வருகின்ற 17ம் தேதி வரை தமிழகத்தில் தொடர்மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால் மழை படிப்படியாக குறையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் , திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள – தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவையில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும் எனவும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழைக்கு வாய்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

நாளை 14 :11 :2022 தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து 15.11.2022 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்பிருப்பதாகவும் 16.11.2022 மற்றும் 17.11.2022 அன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.