சமந்தாவிற்கு வந்த அரியவகை நோய்! மீண்டும் கைகோர்க்கும் நாக சைதன்யா!

சமந்தாவிற்கு வந்த அரியவகை நோய்! மீண்டும் கைகோர்க்கும் நாக சைதன்யா!

சமந்தா மற்றும் நாக சைதன்யாவிற்கு 2017 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. இருவரும் மூன்று ஆண்டுகள் கடந்து வாழ்ந்து வந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதனை அதிகாரப்பூர்வமாக அவர்களது சமூக வலைத்தளத்திலும் கூறினர். பின்பு சைதன்யா வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் பல தகவல் வெளியானது.

இவ்வாறு இருவர் பற்றியும் அரசல் புரசலாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாக தான் உள்ளது. ஆனால் இதனை இருவரும் கண்டு கொள்ளாமல் தங்களது படப்பிடிப்புகளின் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமந்தா அரியவகை நோயான மயோசிட்டிசால் அவதிப்பட்டு வருகிறார். இச்சமயத்தில் கூட மருத்துவமனையில் இருந்து கொண்டே டப்பிங் வேலையும் பார்த்து வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

பலரும் அவரது உடல் நலத்தை பற்றி கேட்டு வரும் வேளையில் அவரது முன்னாள் கணவர் சைதன்யாவும் அவ்வபோது அவரை விசாரித்து வருவதாக கூறுகின்றனர். இது குறித்து சமந்தாவின் நெருங்கிய நண்பரே தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர். விவாகரத்து பெற்ற நிலையில் இவர்கள் இணைந்து படம் நடித்தால் அப்படம் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சைதன்யா சமந்தாவை நல்ல தோழியாக பார்ப்பதாக தெரிவித்துள்ளார். படத்தின் மூலம் மீண்டும் இவர்கள் இணைவதால் வாழ்க்கையிலும் கூடிய விரைவிலேயே இணைந்து விடுவார்கள் என்று கூறுகின்றனர்.