பித்தத்தை முறியடிக்கும் சண்டிக்கீரை!! இது ஆண்களுக்கு வரப்பிரசாதமாக திகழும் கீரை!!

Photo of author

By Divya

பித்தத்தை முறியடிக்கும் சண்டிக்கீரை!! இது ஆண்களுக்கு வரப்பிரசாதமாக திகழும் கீரை!!

Divya

அதிக மருத்துவ குணம் நிறைந்த சண்டிக்கீரை பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.இதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று இங்கு விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)சண்டிக்கீரை – ஒரு கப்
2)பாசிப்பருப்பு – 25 கிராம்
3)உப்பு – தேவையான அளவு
4)எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
5)கடுகு – கால் தேக்கரண்டி
6)வர மிளகாய் – இரண்டு
7)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
8)சின்ன வெங்காயம் – ஐந்து

செய்முறை விளக்கம்:-

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

அடுத்து சண்டிக்கீரையை அதன் நடுப்பகுதியில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு இந்த கீரையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் இரண்டு வர மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு குக்கரில் 25 கிராம் அளவிற்கு பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள சண்டிக்கீரையை அதில் போட்டுக் கொள்ளவும்.அடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில்விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.சூடானதும் கடுகு போட்டு பொரியவிட வேண்டும்.பின்னர் சின்ன வெங்காயம்,வர மிளகாயை போட்டு வதக்க வேண்டும்.

அடுத்து குக்கரில் வேக வைத்த கீரை பருப்பை இதில் கொட்டி வதக்க வேண்டும்.இதன் பிறகு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வதக்கி அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த கீரையை சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.

சண்டிக்கீரையை இதுபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.இது மூட்டுவலி,பித்தம் போன்ற பாதிப்புககளுக்கு மருந்தாக திகழ்கிறது.

சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்தாக இந்த சண்டிக்கீரை திகழ்கிறது.இதற்கு சண்டிக்கீரை,வெந்தயம் மட்டும் இருந்தால் போதும்.முதலில் சண்டிக்கீரையின் நரம்பை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் மற்றொரு அடுப்பில் கால் தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு லேசாக வறுத்து பொடித்து கொதிக்கும் சண்டிக்கீரையில் போட்டு கலந்துவிட வேண்டும்.இந்த பானம் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிளாஸிற்கு வடித்து பருகி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.