நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விண்கலம்:இஸ்ரோ தகவல்!

0
158

நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விண்கலம்:இஸ்ரோ தகவல்!

சந்திராயன்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்க்காக இஸ்ரோவால் கடந்த 14-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் விண்கலம் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.

மேலும் இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சந்திராயன்-3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நேற்று நள்ளிரவு நிறைவு செய்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும்.

அதன்பின் நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்குமென்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Previous article2,000 ரூபாய் நோட்டு பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!
Next articleடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 1 சதவீதம் குறைவு… டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியீடு…