கோலி ஃபார்முக்கு திரும்ப பிராட்மேன் வழியை மேற்கொள்ள வேண்டும்… மூத்த வீரர் அறிவுரை

Photo of author

By Vinoth

கோலி ஃபார்முக்கு திரும்ப பிராட்மேன் வழியை மேற்கொள்ள வேண்டும்… மூத்த வீரர் அறிவுரை

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி குறித்து மூத்த வீரர் சந்து போர்டே பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி குறித்த விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

முன்னாள் இந்திய பயிற்சியாளர் சந்து போர்டே இதுகுறித்து கோலிக்கு அறிவுரை சொல்லும் விதமாக பேசியுள்ளார். அதன்படி, 1969 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நினைவு கூர்ந்த அவர் அந்த நேரத்தில் ஆஸி.யின் கேப்டன்  கடினமான காலத்தில் இருந்ததாகவும் அவருக்கு ஜாம்பவான் கிரிக்கெட்டர் டான் பிராட்மேன் ஒரு யோசனை வழங்கியதன் வழியாக பார்முக்கு மீண்டு வந்ததாகவும் கூறியுள்ளார். அவருக்கு பயிற்சி அமர்வில் ஒவ்வொரு பந்தையும் அடிக்குமாறு பிராட்மேன் அறிவுறுத்தினார். பிராட்மேனின் அறிவுரைகள் ஆஸ்திரேலிய கேப்டனுக்கு பெரிதும் உதவியது என்றும், அவர் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்ததாகவும் அவர் கூறினார்.

இதுபற்றி போர்டே “நாங்கள் 1968 இல் ஆஸ்திரேலியா சென்றோம். அவர்களின் கேப்டன் ஒரு மோசமான பார்மில் இருந்தார். பயிற்சி அமர்வில் ஒவ்வொரு பந்தையும் அடிக்குமாறு சர் டான் பிராட்மேன் அறிவுறுத்தினார். அதன் பிறகு அவர் களத்தில் இறங்கி எங்களுக்கு எதிராக சதம் அடித்தார்,” என்று போர்டே கூறினார். கோலியும் இப்போது அதைதான் செய்யவேண்டும்.

மேலும் அவர் “கவாஸ்கர் முதல் டெண்டுல்கர் மற்றும் நானும், ஒவ்வொரு வீரரும் இதுபோன்ற காலகட்டத்தை கடந்து செல்ல வேண்டும். நீங்கள் ஒரு எளிய பந்தில் அவுட், சிறந்த ஷாட் ஆடிய பிறகும் அவுட். இந்த சூழ்நிலையை சமாளிக்க எந்த நிபந்தனை சிகிச்சையையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று போர்டே மேலும் கூறினார்.