ஏமாற்றிய முன்னாள் காதலன்! ஆண் வேடத்தில் சென்று அசிட் வீசிய பெண்

Photo of author

By Parthipan K

ஏமாற்றிய முன்னாள் காதலன்! ஆண் வேடத்தில் சென்று அசிட் வீசிய பெண்

Parthipan K

Updated on:

Acid Attack

ஏமாற்றிய முன்னாள் காதலன்! ஆண் வேடத்தில் சென்று அசிட் வீசிய பெண்

காதல் தோல்வி என்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அது போன்ற ஒரு சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்திருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஸ்தர் அருகிலுள்ள சோடாஅம்பால் என்ற கிராமத்தைசேர்த்தவர் தம்ருதர் (25).

திருமணத்துக்கான ஏற்பாடுகள் முழுவேகத்துடன் நடந்துகொண்டிருந்தது, அந்நேரத்தில் திடீர்ரென மின்சாரம் தடைபட்டது. அந்நேரத்தில் மணமக்கள் மீது யாரோ ஒருவர் ஆசிட்டை வீசினர். இதில் மணமக்கள் இருவர் உட்பட 12 பேர் காயமடைந்தனர். இதனால் திருமண மண்டபத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது.

அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.  சம்பவம் நடந்த இடத்திலிருந்து பேன்ட், சர்ட் அணிந்த நபர் ஒருவர் தப்பிச்செல்வதை அந்தக் கிராம மக்கள் பார்த்திருந்தனர். போலீஸ் விசாரணையில் அது ஒரு பெண் என்று தெரியவந்தது.

அதுவும் மணமகனின் முன்னால் காதலி என்று தெரியவந்தது , மேலும் அந்த பெண்ணிடம் ஆசிட் வீசிய காரணத்தை போலீஸ் கேட்டபோது காதலன் திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக கூறினர். இதை தொடர்ந்து அந்த பெண்ணை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர் .