துரோகம் செய்வது என்பது அவருடைய சுபாவம் தான்!!! டிடிவி தினகரன் அவர்கள் பேட்டி!!!

0
148
#image_title
துரோகம் செய்வது என்பது அவருடைய சுபாவம் தான்!!! டிடிவி தினகரன் அவர்கள் பேட்டி!!!
எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு துரோகம் செய்வது என்பது இயற்கையான சுபாவம் என்று அமமுக கட்சித் தலைவர் டிடிவி  தினகரன் அவர்கள் தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிகிரி தினகரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது “நாடாளுமன்ற தேர்தலின் கூட்டணி குறித்து நேரம் வரும் பொழுது தெரிவிப்போம். திமுக கட்சியின் ஆட்சி மக்களை ஏமாற்றக் கூடியதாகத் தான் இருக்கின்றது. அதிமுக கட்சியில் இருக்கும் ஸ்லீப்பர் செல்ஸ் அனைவரும் கூடிய விரைவில் வெளி வருவார்கள். அதிமுக கட்சியை காப்பாற்றிக் கொடுத்த பாஜக கட்சிக்கே அதிமுக கட்சி துரோகம் செய்துள்ளது” என்று விமர்சனம் செய்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அவர்கள் “நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவது என்பது சாதாரணமான ஒன்றுதான். ஒரு எளிய மனிதன் அரசியலுக்கு வருவது போலத்தான் நான் அதை பார்க்கின்றேன். விஜய் அரசியலுக்கு வருவதை மக்கள் ஏற்றுக் கொண்டால் சரி.
பாரதிய ஜனதா கட்சியை வைத்து அதிமுக கட்சியும் எடப்பாடி பழனிசாமி அவர்களும் எல்லா பலன்களையும், நலன்களையும் அனுபவித்து விட்டார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறி அதிமுக கட்சி பாஜகவிற்கு துரோகம் செய்துவிட்டது. துரோகம் செய்வது என்பது எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இயற்கையான சுபாவம் தான்.
இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் இறந்தபொழுது எடப்பாடி பழனிசாமி அவர்களை முதல்வராக்கிய சசிகலா அவர்களுக்கு துரோகம் செய்தார். தற்பொழுது அதிமுக கட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜக கட்சிக்கு தற்பொழுது துரோகம் செய்துள்ளார்” என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
Previous articleஊழலால் வந்த 600 கோடி பத்தல 1000 கோடி தான் வேண்டும்!! அம்பலமான அண்ணாமலையின் பக்கா பிளான்!!
Next articleஅதிரடி காட்டிய கிளென் மேக்ஸ்வெல்!!! 399 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!!!