அதிரடி காட்டிய கிளென் மேக்ஸ்வெல்!!! 399 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!!!

0
41
#image_title
அதிரடி காட்டிய கிளென் மேக்ஸ்வெல்!!! 399 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!!!
உலகக் கோப்பை தொடரின் 24வது லீக் சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் முடிவில் 399 ரன்கள் குவித்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரின் 24வது லீக் சுற்றில் இன்று(அக்டோபர்25) நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் அவர்களும் ஸ்டீவன் ஸ்மித் அவர்களும் சிறப்பாக விளையாடத் தொடங்கினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் சதமடித்து 104 ரன்களும், ஸ்டீவன்  ஸ்மித் அரைசதம் அடித்து 71 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்க மார்னஸ் லபசக்னே அரைசதம் அடித்து 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். தொடர்ந்து அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 44 பந்துகளில் சதமடித்து 106 ரன்கள் சேர்த்தார். அதில் 8 சிக்சர்களும் ஒன்பது பவுண்டரிகளும் அடங்கும். மற்ற வீரர்கள் அனைவரும் சிற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் சேர்த்தது.
நெதர்லாந்து அணியில் வான் பீக் அவர்கள் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாஸ் டி லீடே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து நெதர்லாந்து அணி 400 ரன்கள் என்ற மெகா இலக்காக கொண்டு தற்பொழுது விளையாடி வருகின்றது.