வருமான வரித்துறை ஊழியர்களுக்கு வைத்த “செக்”!! இனி யாரும் ஏமாற்ற முடியாது!!
இந்தியாவில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் ஊழியர்கள் வருமான வரி கட்டுவது வழக்கம் ஆகும். ஆனால் ஒரு வருடத்திற்கு ஐந்து லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெரும் பணியாளர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அரசு தெரிவித்திருந்தது.
ஊழியர்களின் வீட்டு வாடகை மற்றும் நன்கொடை போன்றவை போக வருட வருமானம் ஐந்து லட்சத்திற்கும் மேல் வந்தால் அவர்கள் வருமான வரி கட்ட வேண்டும்.
எனவே, பல்வேறு ஊழியர்கள் இதற்காக பொய்யான வீட்டு வாடகையை ஒப்படைத்து வருவதாக குற்றங்கள் எழுந்து வருகிறது. இதை தடுக்க தற்போது அரசு ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதாவது, போலியான ஆவணங்களை கண்டுபிடிக்க ஒரு புதிய சாப்ட்வேர் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் ஒப்டைக்க கூடிய ஆவணங்கள் அனைத்தும் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.
மேலும், ஊழியர்கள் ஒப்படைக்கூடிய ஆவணங்கள் போலியானதாக இருந்தால் அவர்களுக்கு இருபது சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வருமான வரி செலுத்துவதற்கு மனம் இல்லாமல் போலியான வீட்டு வாடகை செலுத்தும் ஆவணங்களை ஊழியர்கள் ஒப்படைத்தால் அவர்களுக்கு அபராதம் குறித்து எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் வருமான வரி துறை கூறி உள்ளது.
எனவே, இதன் மூலம் இனிமேல் எந்த ஒரு ஊழியரும் பொய்யான ஆவணங்களை ஒப்படைக்க முடியாது அப்படியே ஒப்படைத்தாலும் இந்த சாப்ட்வேரில் தெரிந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.