உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!!

முதலில் ஒரு சிறிய சந்தனக் கட்டை (100 ரூபாய் மதிப்பில்) வாங்கி அதை பன்னீர் ஊற்றி கழுவி துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு பூ வைத்து தட்டில் வைக்கவும்.

அடுத்து ஒரு சிறிய வலம்புரி சங்கு வாங்கி பால் ஊற்றி கழுவி பின் பன்னீர் ஊற்றி கழுவி துடைத்துக் கொள்ளவும். அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு தட்டில் வைத்து அதில் நிறையும் வரை அரிசியும் ஒரு 5(ஐந்து) ரூபாய் நாணயமும் போட்டு பூஜை அறையில் வைக்கவும்.

பிறகு ஒரு கண்ணாடி கிண்ணத்தில் 101 ரூபாய் நாணயம் வைத்து ஒரு துண்டு பச்சைக் கற்பூரம், 2 இலவங்கம், ஒரு ஏலக்காய் போட்டு ஒரு பூ வைத்து பூஜை அறையில் வைக்கவும்.

இது அனைத்தும் ஐஸ்வர்யத்தை அள்ளித் தரக் கூடியவை ஆகும். மகா லட்சமி வாசம் செய்யும் பொருட்கள் இவை. தவறாமல் வைத்து பூஜித்து வாருங்கள். முன்னேற்றத்தை கண்கூட பார்ப்பீர்கள்.

மாதம் ஒருமுறை இதே போல் கழுவி துடைத்து, சுத்தம் செய்து வைக்கவும். அரிசியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.