உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த கடவுள் படங்கள் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!
நம் வீட்டு பூஜை அறை பெரியதோ, சிறியதோ அவை முக்கியம் அல்ல. நாம் பூஜை அறையை எவ்வாறு வைத்துக் கொள்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியம். வீட்டு பூஜை அறையை வாரத்தில் ஒருமுறை சுத்தம் செய்து பூஜை பொருட்களை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.
பூஜை அறை நறுமணத்துடன் இருந்தால் வீட்டில் தெய்வீக சக்தி உண்டாகும். அதுமட்டும் இன்றி
கடவுள் படங்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும்.
பூஜை அறையில் வைக்கும் சாமி சிலைகள் சிறியதாக இருக்க வேண்டும். அதற்கு தினமும் அபிஷேகம், ஆராதனை செய்ய வேண்டும்.
மேலும் வீட்டு பூஜை அறையில் ககட்டாயம் இருக்க வேண்டிய சாமி படங்கள் என்னென்ன என்பதை அறிந்து அந்த கடவுள் படங்களை வைத்து வழிபட்டு வந்தால் வீட்டில் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே இருக்கும்.
அந்தவகையில் நம் குலத்தை காக்கும் குலதெய்வம், விநாயகர், லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி, பெருமாள் பசு அல்லது ராதையுடன் கூடிய கிருஷ்ணர், மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, சிவன் உள்ளிட்ட கடவுள் படங்களை வைத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் நல்லது மட்டுமே நடக்கும்.
ஆனால் உக்கிர தெய்வங்களின் படங்களை வீட்டு வைத்து வழிபட கூடாது. சனிபகவானை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது.