சென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை – அண்ணன் உள்ளிட்ட மூவர் செய்த கொடூரத்தின் பின்னணி!

0
321
சென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை
chennai child harressmnet

சென்னை வில்லிவாக்கம் அருகே பாட்டியிடம் வளர்ந்து வந்த 11 வயது சிறுமிக்கு ஆறு மாதம் தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம் அரங்கேறி உள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பாட்டியின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் மது போதைக்கு ஆளானதால் சிறுமியை கவனிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக சிறுமிக்கு தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம், அவரின் சித்தியின் மூலம் மூலம் தெரிய வந்துள்ளது.

தொடர் பாலியல் வன்கொடுமை காரணமாக சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது. அப்போது அந்த சிறுமியின் பாட்டி மற்றும் அவரின் சித்தி விசாரணை நடத்தியதில், சிறுமி அளித்த தகவல் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது.

இதனை எடுத்து சிறுமிக்கு தனியா மருத்துவமனையில் சிகிச்சை முதல் முதல் உதவி சிகிச்சை அளித்த உறவினர்கள், தொடர்ந்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சிறுமியின் பெரிப்பா மகன் சிறுவன் ஒருவனும், அவரின் அவனின் நண்பன் ஒருவனும், மேலும் அதே பகுதியில் தையல் கடை நடத்தி வரும் குமார் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சிறுமிக்கு தொடர்பாலியல் வன்முறை கொடுத்த விவகாரத்தில் வேறு யாரேனும் தவறு செய்து உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.

சென்னையில் மது போதைக்கு அடிமையான பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் இருந்த 11 வயது சிறுமி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகாதலனுடன் ஏற்பட்ட சண்டையால் இரயில் முன் பாய்ந்த காதலி! நெஞ்சை பதறச் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!
Next articleகுஷ்புக்கு கோயில் கட்டியது எல்லாம் பைத்தியக்காரத்தனம்..!! குஷ்புவின் மாமியர் நச் பதில்..!!