குப்பையை ஒழுங்கா எடுக்கமாட்டியா.? தூய்மை பணியாளரை குடும்பமே அடித்து சாக்கடையில் தள்ளிய கொடூரம்!

Photo of author

By Jayachandiran

குப்பையை ஒழுங்கா எடுக்கமாட்டியா.? தூய்மை பணியாளரை குடும்பமே அடித்து சாக்கடையில் தள்ளிய கொடூரம்!

தனது வீட்டின் முன்பு சரியாக சுத்தம் செய்யவில்லை என்று தூய்மை பணி செய்த பெண்ணை அடித்து சாக்கடையில் தள்ளிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னையில் உள்ள சோழிங்கநல்லூரில் தங்கள் வீட்டிற்கு முன்பு குப்பைகளை சரியாக சுத்தம் செய்யவில்லை என்று கூறி தூய்மை பணி செய்யும் பெண்ணை கணவனும், மனைவியும் சேர்ந்து சண்டையிட்டு தாக்கினர். இன்னொரு தூய்மை பணியாளரை கீழை சாக்கடை கால்வாயில் தள்ளி காலால் மிதித்து அவரின் ஆடையை கிழித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர். தெருவில் இருக்கும் குப்பைகளை எடுக்க தெரிந்த உனக்கு என் வீட்டு முன்பு இருக்கும் குப்பையை எடுக்க தெரியாதா? என்று கேள்வி கேட்டு கணவனும் மனைவியும் அடித்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சம்பவம் குறித்து அந்த வீட்டுகாரர் கடுமையாக பேசியுள்ளார். உன்னால் முடிந்ததை நீ பார்த்துக் கொள் என்று அப்பெண்ணிடம் சவால்விடுவது போல் அந்த வீட்டின் நபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். தற்போது சமூக வலைதளங்களில் அந்த பிரச்சினை குறித்த காணொளி வேகமாக பரவி வருகிறது. தூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளிய சம்பவம் பொது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.