சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!! மிஸ் பண்ணாம பயன்படுத்திக்கோங்க!!
சென்னை மாநகராட்சி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை பெருநகர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவு நீர் அகற்றும் வரி, குடிநீர் கட்டணத்தை விரைவில் செலுத்தாமல் இருக்கும் நுகர்வோருக்காக மாதத்திற்கு 1.15% மேல் வரி வாங்கப்பட்டு வருகிறது.
தற்போது நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு இந்த வரியை 1% குறைக்க சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் உரிய நாட்களுக்குள் வரியை செலுத்தி இந்த மேல் வரியை தவிர்க்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நுகர்வோர்கள் இந்த கட்டணத்தை இணையதளம் மூலமாக https://cmwssb.tn.gov.in/ என்ற வலைதளத்தை பயன்படுத்தி அதில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தி வரலாம்.
மேலும் இதை காசோலை, வரையோலை மற்றும் ரொக்கமாக பணிமனை அலுவலகங்களிலும், இதைப்போலவே காசோலை மற்றும் வரையோலையாக தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் செலுத்தி வரலாம். இதுமட்டுமல்லாது, upi, OR குறியீடு முறைகளை பயன்படுத்தியும் செலுத்தி வரலாம்.
இதுமட்டுமல்லாது, குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் இணைப்புகளை பொதுமக்கள் எளிதில் பெரும் வகையில் அமைக்கப்பட்டு புதிய திட்டத்தை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தங்களது வீட்டிற்கு குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பைப்பெற பணிமனை அலுவலகங்களில் நேரடியாகவோ, தொலைப்பேசி மூலமாகவோ, இணையதளம் வழியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
அதனையடுத்து உரிய ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் அந்த இணைப்பு திட்டத்தால் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
இது தொடர்பான விவரங்களை அறிய 044-4567 4567 தொலைப்பேசி எண்ணிற்கும்,
https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரிக்கும் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.